0
யாழ்ப்பாணத்தில் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் , சிறுவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சசிதரன் திசானுஜன் (வயது 15) எனும் சிறுவன் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளான்.
சிறுவனின் உடல் பாகங்களில் திடீரென வீக்கங்கள் ஏற்பட்டமையால் , கடந்த 20ஆம் திகதி சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வந்தான்.
அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மரணத்திற்கான காரணம் தெரியாத நிலையில், உடற்கூற்று பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.