Home இலங்கை வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி

வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி

by ilankai

வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை சந்தித்து கலந்துரையாடினார்.

வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான 55 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டார்.

Related Articles