4
பாகிஸ்தான் எல்லையில் இந்தியா இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவதாக இஸ்லாமாபாத்திற்கு நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் உயர்மட்ட தூதர் முகமது காலித் ஜமாலி, தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இந்தியாவால் தாக்கப்பட்டால் அல்லது பாகிஸ்தானின் நீர் விநியோகத்தை சீர்குலைத்தால், இஸ்லாமாபாத் அணு ஆயுதங்கள் உட்பட அதன் முழு இராணுவ ஆயுதங்களையும் பயன்படுத்த நேரிடும் என எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானின் சில பகுதிகளைத் தாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவே இது நடக்கும் என்றும் அது விரைவில் நடக்கும் என்றும் எங்களுக்குத் தோன்றுகிறது.
பாகிஸ்தானில் நாங்கள் வழக்கமான மற்றும் அணு ஆயுதம் என இரண்டு சக்திகளையும் முழுமையாகப் பயன்படுத்துவோம் என்று ரஷ்யாவின் தொலைக்காட்சி செவ்வியில் அவர் கூறினார்.