6
இன்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தீர்க்கமான வெற்றியைப் பெற்றார்.
இந்த பூமிக்பந்தில் உள்ள சிறந்த தேசத்திற்கு தொடர்ந்து சேவை செய்வதற்கான வாய்ப்பிற்காக ஆஸ்திரேலிய மக்களுக்கு நன்றி என்று தொழிலாளர் கட்சித் தலைவர் சிட்னியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஆதரவாளர்களிடம் கூறினார்.
எதிர்க்கட்சியான லிபரல்-நேஷனல் கூட்டணியின் தலைவர் பீட்டர் டட்டன், தோல்வியை ஒப்புக்கொண்டார், அல்பானீஸ் வெற்றி பெற்றதற்கு தொலைபேசி அழைப்பில் வாழ்த்து தெரிவித்தார்.
பீட்டர் டட்டன் நாடாளுமன்றத்தில் தனது சொந்த இடத்தையும் இழப்பார் என்று கணிக்கப்பட்டது.