நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பரிபூரணமடைந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கொழும்பில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நல்லை ஆதீன குரு முதல்வர் வியாழக்கிழமை பரிபூரணமடைந்தார்.
சுவாமிகளின் திருவுடல் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு கொண்டுவரப்பட்டு பூரணத்துவ சாந்தி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டு திருவுடல் ஊர்வலமாக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரியைகள் இடம்பெற்றது.
நல்லை ஆதீனத்தின் குரு முதல்வராக செயற்பட்ட சுவாமிகள் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையிலும் மக்களுக்காக பல சேவைகளை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் பூரணமடைந்த செய்தி சைவமக்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக சைவசமய அமைப்புக்கள் தெரிவித்துள்ளது.