இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் புகழுடல் பலரும் இன்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
நல்லூர் ஆலய சூழலிலுள்ள நல்லை ஆதீனத்தில் இன்று (02) இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.
நோயுற்றிருந்த நிலையில் கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் நல்லை ஆதீன குரு முதல்வர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (01) இறையடி சேர்ந்திருந்தார்.
குரு முதல்வரின் புகழுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு இன்று மதியம் கொண்டு வரப்பட்டது.
புகழுடலுக்கு மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
யாழ்.குடாநாடு இராணுவ ஆட்சியினுள் முடக்கப்பட்டிருந்த போது ஜனநாயக உரிமைகளிற்காக குரல் கொடுத்தவர்களுள் நல்லை ஆதீனமும் ஒருவராவார்.
அந்நிலையில் கொலை மிரட்டல்களை அவர் எதிர்கொண்டுமிருந்தார்.