Home யாழ்ப்பாணம் அனுரவுக்கு சுமந்திரன் கடும் எச்சரிக்கை!

அனுரவுக்கு சுமந்திரன் கடும் எச்சரிக்கை!

by ilankai

வடபுலத்தில் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

தேர்தலின் போது, மக்களின் நிலங்களைத் திருப்பித் தருவதாகவும், இராணுவத்தினரிடம் உள்ளவற்றை விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்கள் இருப்பினும், ஆட்சிக்கு வந்ததும்,; காணி கையகப்படுத்துதலைத் தொடங்கியுள்ளதாக கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்,ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.காணி அபகரிப்பு வர்த்தமானியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் வாக்குறுதிகளுக்கு மாறாக காணிகளை கையகப்படுத்துவதை உடனடியாக நிறுததவேண்டும்.குறிப்பாக, காணி கையகப்படுத்தும் வர்த்தமானியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், ஜனாதிபதி  யாழ்ப்பாணத்தில் கால் வைக்க முடியாதபடி செய்வோம்” என்றும் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார். 

எதிர்வரும் மாத காலத்திற்குள் எந்த உரிமைகோரல்களும் பெறப்படாவிட்டால் வடக்கு மாகாணத்தில் மொத்தம் 5,940 ஏக்கர் காணி அரசு நிலமாக அறிவிக்கப்படும் என சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூல வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது,”

;.

Related Articles