Home யாழ்ப்பாணம் படியேறும் பக்தர்கள்?

படியேறும் பக்தர்கள்?

by ilankai

நாடாளுமன்ற தேர்தலில் மண் கௌவிய முன்னாள் தலைவர்கள் உள்ளுராட்சி சபை தேர்தல் மூலம் மீள் எழுச்சி கொள்ள முற்பட்டுள்ளனர்.அதற்கேதுவாக வீடு வீடாக பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆலயங்களையும் தவறவிடாது சென்றுவருகின்றனர்.

இந்நிலையில் நயினாதீவில் பிரசரசார கூட்டங்களுக்கு சென்ற் டக்ளஸ் தேவானந்தா பிரதேசங்களில் உள்ள சில மதஸ்தலங்களுக்கும் சென்றுள்ளாhர்.நயினாதீவு நாகபூசணி ஆலயத்தை சென்றடைந்த டக்ளஸ் நன்றி மறவாது அருகிலுள்ள பௌத்த விகாரையையும் தரிசித்துள்ளார்.

இதனிடையே தமிழ் அரசுக் கட்சி தலமைத்துவம் தந்தை செல்வா அவர்களது கொள்கையுடன் பயணிக்கத் தயாராக இருந்தால் அவர்களுடன் பேசுவதற்கும் இணைந்து செயலாற்றவும் நாம் தயார் என தெரிவித்துள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 

தமிழ் அரசுக் கட்சியை நாம் ஒரு போதும் அழிக்க நினைத்ததில்லை! அதனை அழிக்கவும் கூடாது, அழிக்கவும் முடியாதென அவர் தெரிவித்துள்ளார்-

முன்னதாக உள்ளுராட்சி சபை தேர்தல் மூலம் தமிழரசுக்கட்சியை இல்லாதொழிக்க அவர் அழைப்புவிடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles