Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தொழிலாளர் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படுகிற மக்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தமிழரசுக்கட்சி தான் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ் வீரசிங்க மண்டபத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்..
தொழிலாளர்களிற்காக அன்று முதல் இன்றுவரை இந் நாட்டில் செயற்படுகின்ற ஒரே கட்சி தமிழரசுக் கட்சி தான். தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான நம்பிக்கையை பெற்ற பிரதான கட்சியும் எமது கட்சி தான்.
இன்றைய மேநாளில் நாம் சில தீர்மானங்களையும் எடுத்துள்ளோம். குறிப்பாக இராணுவ கையிருப்பில் உள்ள எமது மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும், விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டும், தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்கட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
இன்றைக்கு நாட்டில் நாளாந்தம் விலைவாசி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் தேர்தல் வருஐஇற போது குறைப்பது மாதிரி குறைத்துக் கொண்டாலும் மறுபக்கம் விலை வாசி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
குறிப்பாக சீனியை விட உப்பின் விலை அதிகரித்துள்ளது. அதிலும் ரஜலுனு என உப்பிற்கு ஒரு புதிய பெயரை வைத்தவர்கள் அதைப் பற்றிக் கேட்டால் பெயரைப் பார்க்காதீர்கள் ருசியைப் பாருங்கள் எனச் சொல்கிறார்கள்.
தொழிலாளர்களுக்கு நன்மை அளிப்பதாக கூறிக்கொண்டு, முதலாளித்துவ கொள்கையில் பயணித்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு எப்படி நன்மையளிக்க முடியும். எனவே முதலாளித்துவ கொள்கையை விட்டு விலகி உங்களது பழைய ஆரம்பத்திற்கு வாருங்கள்.
லெலினிச கோட்பாட்டிற்கு வாருங்கள், சம்பள உயர்வு கொடுங்கள், அப்படியாக உங்களால் திரும்பி வர முடியாவிட்டால் மக்களிடம் செல்ல முடியாத நிலை உங்களுக்கு விரைவில் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொழிலாளர் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படுகிற மக்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தமிழரசுக்கட்சி தான் என மேலும் தெரிவித்தார்.