Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வியட்நாம் போர் முடிவுக்கு வந்ததையடுத்து அதன் 50வது ஆண்டு நிறைவையொட்டி வியட்நாம் இன்று புதன்கிழமை ஒரு பெரிய கொண்டாட்டத்தை நடத்தியது.
தெற்கு வியட்நாமிய நகரமான சைகோனில் ஒரு பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புடன் கொண்டாட்டங்களும் நடைபெற்றன.
முதல் முறையாக, சீன, லாவோ மற்றும் கம்போடிய துருப்புக்களின் ஒரு சிறிய குழு வியட்நாமிய இராணுவ அமைப்புகளுக்குப் பின்னால் அணிவகுத்துச் சென்றது.
அணிவகுப்பு பெரும் கூட்டத்தை ஈர்த்தது. அவர்களில் பலர் ஒரு இடத்தைப் பெறுவதற்காக இரவு முழுவதும் முகாமிட்டிருந்தனர். பல இளைஞர்களை உள்ளடக்கிய கூட்டம், சிவப்புக் கொடிகளை அசைத்து, தேசபக்தி பாடல்களைப் பாடியது.
சுதந்திர அரண்மனை அருகே நடைபெற்ற அணிவகுப்பில் தேசியக் கொடி மற்றும் போர் விமானங்களும் உலங்கு வானூர்திகளும் பறந்தன. துருப்புக்கள், போராளிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் உள்ளூர் குடிமக்கள் உட்பட சுமார் 13,000 பேர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
1954 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போர், ஏப்ரல் 30, 1975 அன்று கம்யூனிசத்தால் நடத்தப்படும் வடக்கு வியட்நாம் அமெரிக்க ஆதரவு தெற்கு வியட்நாமின் தலைநகரான சைகோனைக் கைப்பற்றியபோது முடிவுக்கு வந்தது.
சைகோன் நகரம் போருக்குப் பின்னர் வியட்நாமின் தேசிய தலைவரும் கம்யூனிசத் தலைவரான ஹோ சி மின் நினைவாக இந்த நகரம் ஹோ சி மின் நகரம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
இது கொடுங்கோன்மைக்கு எதிரான நீதியின் வெற்றி என்று வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் நாட்டின் உயர்மட்டத் தலைவருமான டோ லாம் அணிவகுப்புக்கு முன்னதாக ஆற்றிய உரையில் கூறினார்.
வியட்நாம் ஒன்று, வியட்நாமிய மக்கள் ஒன்று. ஆறுகள் வறண்டு போகலாம், மலைகள் அரிக்கப்படலாம், ஆனால் அந்த உண்மை ஒருபோதும் மாறாது. என்ற ஹோ சி மின்னின் பொன்மொழிகளில் ஒன்றை வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் நாட்டின் உயர்மட்டத் தலைவருமான டோ லாம் மேற்கோள் காட்டினார்.
அமெரிக்கா தனது கடைசி போர் துருப்புக்களை நாட்டிலிருந்து திரும்பப் பெற்ற சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், சைகோனின் வீழ்ச்சியில் சுமார் 3 மில்லியன் வியட்நாமியர்களையும் கிட்டத்தட்ட 60,000 அமெரிக்கர்களையும் கொன்ற 20 ஆண்டுகால மோதலின் முடிவைக் குறித்தது.
தனது உரையில், முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் சீனாவின் பெரும் ஆதரவு மற்றும் லாவோஸ் மற்றும் கம்போடியாவின் ஒற்றுமை ஆகியவை வடகொரியாவின் வெற்றிக்குக் காரணம் என்று டோ லாம் கூறினார். அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள முற்போக்கான மக்களின் ஆதரவையும் அவர் குறிப்பிட்டார்.
போரின் பின்னர் வியட்நாம் அமெரிக்காவுடனான தனது உறவுகளை மேம்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளைத் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2023 ஆம் ஆண்டில், வியட்நாம் அமெரிக்காவை ஒரு விரிவான மூலோபாய பங்காளியாக அறிவித்தது. இது சீனா மற்றும் ரஷ்யாவைப் போலவே உயர் மட்டத்தில் வைத்ததுள்ளது.