Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்திய மீனவர்கள் அத்துமீறல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸினை தொடர்ந்து இராமலிங்கம் சந்திரசேகரனும் கால அவகாசம் கோர தொடங்கியுள்ளார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.” என தற்போதைய கடற்றொழில், அமைச்சர்; சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ். நெடுந்தீவு பகுதியில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தங்கியிருந்து பிரச்சாரங்களை முன்னெடுத்துவரும் நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அங்கு பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் சந்திரசேகரனும், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அப்போது இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு நிரந்தர பாதுகாப்பு பொறிமுறையொன்று அவசியம் என உள்ளுர் மீனவ அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
அப்போதே அமைச்சர், இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்குரிய இராஜதந்திர நடவடிக்கை உட்பட அனைத்து விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும், அது தொடர்பில் கடற்படையினருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.