Home இந்தியா இந்தியா கொல்கத்தா விடுதி தீ விபத்தில் குறைந்தது 14 பேர் பலி!

இந்தியா கொல்கத்தா விடுதி தீ விபத்தில் குறைந்தது 14 பேர் பலி!

by ilankai

இந்தியாவின் கொல்கத்தாவின் மத்திய வணிக மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விடுதியில் ஏற்பட்ட  தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.

ஆறு மாடிகளைக் கொண்ட அந்த பட்ஜெட் விடுதியின் கூரையிலிருந்து சுமார் 20 பேர் மீட்கப்பட்டதாகவும், சிலர் கட்டிடத்தின் குறுகிய விளிம்புகளில் இருந்தும் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் கட்டிடத்தில் சுமார் 50 பேர் இருந்ததாகவும், 45 அறைகளில் பெரும்பாலானவை நிறைந்திருந்தாகவும் காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரிதுராஜ் விடுதியின் கூரையிலிருந்து குதித்து ஒருவர் இறந்ததாக கொல்கத்தாவின் மேயர் மற்றும் பிற இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான இறந்தவர்கள் ஹோட்டலின் படிக்கட்டுகளில் கண்டெடுக்கப்பட்டனர். மேலும் மூச்சுத்திணறல் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று மேற்கு வங்க அவசர சேவைகள் அமைச்சர் சுஜித் போஸ் தெரிவித்தார்.

விடுதியின் தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை தடயவியல் குழு அந்த இடத்தைப் பார்வையிடும் என்று போஸ் மேலும் கூறினார். சமையலறைக்கு அருகிலுள்ள முதல் மாடி அறையில் இரவு 8:15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறியவும், விடுதியின் உள்ளமைக்கப்பட்ட தீயணைப்பு அமைப்பு ஏன் வேலை செய்யவில்லை என்பதையும் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வருகை தருகிறது. தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹோட்டலில் உள்ளமைக்கப்பட்ட தீயணைப்பு அமைப்பு ஏன் வேலை செய்யவில்லை என்பதையும் இது ஆராயும்” என்று மேற்கு வங்க மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைச்சர் சுன்ஜித் போஸ் தெரிவித்தார்.

இந்திய ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், ஜன்னல்கள் வழியாகவும், விளிம்புகள் வழியாகவும் மக்கள் தப்பிக்க முயற்சிப்பதைக் காட்டின.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும் என்று அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Articles