யாழ்ப்பாணத்தில் வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த பல்பொருள் அங்காடியின் உரிமையாளருக்கு 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால், உணவு கையாளும் நிலையங்கள், பூட் சிற்றிகள், பலசரக்கு வியாபார நிலையங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதன் போது, கோண்டாவில் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் என்பன மீட்கப்பட்டன.
அது தொடர்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.