Home யாழ்ப்பாணம் பிரதமர் ஹரிணிக்கு தேர்தல் ஆணைக்குழு பயம்!

பிரதமர் ஹரிணிக்கு தேர்தல் ஆணைக்குழு பயம்!

by ilankai

சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு கோயில் வளாகத்தைப் பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும்  முறைப்பாடு அளித்திருந்தாலும் தேர்தல் ஆணைக்குழு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரச்சாரம் நடத்துவது தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்ட போது, தேர்தல் ஆணைய அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்றனர்.

ஆனால் பிரதமரின் பாதுகாப்புப் பணியாளர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை, அவர்கள் திரும்பிச் சென்றனர்.

நாட்டில் தேர்தல் நடவடிக்கைகளை நிர்வகிக்கவும் மேற்பார்வையிடவும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.”

இந்நிலையில், சட்டங்களின்படி, தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல் துறை தேர்தல் ஆணையத்தின் கீழ் வருவதாகவும் சட்டமும் அரசியலமைப்பும் கூறவதாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், தேர்தல் ஆணைக்குழு ஒரு சுயாதீன ஆணைக்குழுவாக இருந்தாலும், அந்த அதிகாரங்களில் எதையும் பயன்படுத்தாததால் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெறுவதாக குற்றஞ்சுமத்தியுள்ளார்.

Related Articles