Home யாழ்ப்பாணம் யாழ் . பெரிய கோவிலில் ஈஸ்டர் நினைவேந்தல்

யாழ் . பெரிய கோவிலில் ஈஸ்டர் நினைவேந்தல்

by ilankai

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குத்தந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவயவங்களை இழந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து மெளன அஞ்சலி, பொது சுடரேற்றி, மெழுகுவர்த்திகளும் பற்ற வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

நிகழ்வில் பங்குத் தந்தைகள், பாதிரியார்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேவேளை தேவாலய சூழலில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 

Related Articles