நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறை செய்ய அனுர தலைமையிலான தேசிய மக்கள் முனைகின்றது என யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்.
தனது கட்சியிடம் அதிகாரம் கிடைக்கும் பட்சத்திலே உள்ளூர் அதிகர சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படும் என்ற தொனிப்பொருளில் வடக்கின் தேர்தல் பிரசார மேடைகளில் கருத்து வெளியிட்டு வருகின்றார்.
இது ஒரு மிகப்பெரிய ஊழல் மோசடியாகும். தேர்தல் ஆணைக் குழுவுக்கு இரண்டாவது கடிதமும் அனுபப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கருத்து ஒரு மக்கள் கூட்டத்தின் ஜனநயகத்தை கேள்விக் குறியாக்குகின்றது.
அதுமட்டுமல்லாது இவர்கள் எத்தகைய பொய்யர்கள் என்பதை காட்டுகின்றது. இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறை இந்த அரசு செய்ய முயல்கின்றது.
இவர்களது மிரட்டல் அதிகார இலஞ்சத்தை எவரும் ஏற்காது தேசிய மக்கள் சக்திதை தமிழர் தாயக பகுதிகளில் இருந்து மக்கள் தூக்கி எறிவது அவசியமாகும்.
எமக்கு மத்தியின் எந்த நிதியும் வேண்டாம்.
எமக்கு கேள்வி கேட்க அதிகாரம் இல்லை என்றால் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது எம்மிடம் எமது மக்களிடம் வந்து வாக்கு கேட்பதற்கு.
அந்தவகையில் தமிழரையும் தமிழர் இருப்பையும் இல்லாதொழித்த தேசிய மக்கள் சக்தியை தமிழ் அரசியல் பரப்பில் காலூன்ற விடாது அனைவரும் ஒருமித்து எதிர்கொள்வது அவசியம்.
இதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் கட்சிகளுக்குள் இருக்கும் முரண்படுகளே தேசிய மக்கள் கட்சியின் வடக்கின் வருகைக்கான வாய்ப்பை வழங்கியது. இதை உணர்ந்து தமிழ் மக்கள் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளுக்கு வாக்களிப்பது அவசியம் என மேலும் தெரிவித்தனர்.