18
பானம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பானம பகுதி கடலில் நீந்திக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நடந்ததாக பானம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமற்போன இளைஞர்கள் 23 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் மத்திய பானம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பானம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிக்கடுவ துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு தம்பதியினர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் ரஷ்ய தம்பதியினர் எனவும், ஆணுக்கு 47 வயது எனவும் பெண்ணுக்கு 46 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.