Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மஹவ – ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோரால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துடன் இணைந்ததாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இந்திய பிரதமரும் இந்த திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் பெயர் பலகையை திறைநீக்கம் செய்யப்பட்டு ரயில் வீதி மற்றும் சமிக்ஞை கட்டமைப்பு திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ரயில் புறப்பட்டுச் செல்வதற்கான முதலாவது சமிக்ஞை காண்பிக்கப்பட்டது.
இந்திய Credit Line இன் கீழ் செயற்படுத்தப்படும் மஹவ – ஓமந்தை ரயில் வீதி நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் பெறுமதி 91.27 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அதேபோல், 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஸ்தாபிக்கப்பட்ட மஹவ – அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிச்ச, வட மத்திய மாகாகண ஆளுநர் வசந்த ஜினதாச ஆகியோரும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.