Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ள நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பல இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்புக்கு வரவுள்ளதுடன், அவரை வரவேற்கும் விழா ஏப்ரல் 5 ஆம் திகதி காலை சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே “கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது. எது எப்படி இருந்தாலும் கச்சத்தீவென்பது இலங்கைக்குரியதாகும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் மத்தியில் யாழில் இன்று (03) ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் ஆனால் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதேசம் கூட அங்கீகரித்துள்ளது.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாரத பிரதமர் மோடியின் வருகை என்பது மீனவர்களுக்கான வருகை அல்ல. 13 ஆவது திருத்தத்துக்கான வருகையும் அல்ல. அவ்வாறு கூறிக்கொண்டு வேண்டுமானால் இங்குள்ள தமிழ்க் கட்சிகள் சுய திருப்தி அடையக்கூடும்.” எனவும் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.