Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மன்னார் – பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (22) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர்.
பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த லொறி வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகிய நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த லொறியில் 4 நபர்கள் பயணித்துள்ளனர்.
இதன் போது, ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர்.
காயமடைந்த மூவரும் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.