Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்.மாவட்டத்தில் பரவலாக தமிழ் கட்சிகளது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமது கட்சி உயர் நீதிமன்றம் செல்லத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இதனால் யாழ்.மாவட்டத்தில் சில சபைகளிற்கான தேர்தல் இடம்பெறுமாவென்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகரசபையில் வி.மணிவண்ணன் தலைமையிலான மான் சின்ன வேட்புமனு மற்றும் நல்லூர் பிரதேசசபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என பல கட்சிகளதும் வைத்தியர் அருச்சுனா தலைமையிலான சுயேட்சைக்குழு உட்பட பல சுயேட்சைக்குழுக்களதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிகளது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் இல்லை.
எனினும் இரவிரவாக வேட்பாளர் பட்டியல்களை சரிபார்க்கும் பணி யாழ்.மாவட்ட செயலகத்தின் தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்றவண்ணமுள்ளது.