Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பொகவந்தலாவை – தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன், மனைவி ஆகிய இருவரும் சடலங்களாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.
38 வயதான சின்னையா விஜயகுமார் மற்றும் 37 வயதான பெருமாள் கௌரி என்ற இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குறித்த வீட்டில் இரண்டு சடலங்கள் காணப்படுவதுடன், அவற்றின் அருகில் நஞ்சு போத்தல் ஒன்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் சிறிது காலம் கொழும்பு பகுதியில் கூலி தொழில் செய்து வந்ததாகவும், கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு வருகை தந்து நான்கு நாட்கள் கடந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.