Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஆட்சியின் பங்காளராக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் உரிமைக்காக உரிமைகளோடு சேர்ந்து பயணிக்க கூடியவர்களாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன் தெரிவித்துள்ளார்
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தூர நோக்குடன் பயணிக்க வேண்டிய தேவை தற்போது எமது தமிழ் சமூகத்திற்கு இருக்கின்றது. தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது. பேரம் பேசும் சக்தி என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஆட்சியின் பங்காளராக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் உரிமைக்காக உரிமைகளோடு சேர்ந்து பயணிக்க கூடியவர்களாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் அதனுடைய ஒரு பயணமாக தான் எமது கட்சியின் வளர்ச்சி காணப்படுகிறது.
2015ஆம் ஆண்டு தோல்விக்கு பின்னர் நாங்கள் துவண்டு விடவில்லை. அதன் பின்னர் உள்ளூராட்சி தேர்தல் மூலம் மீண்டு எழுந்துள்ளோம். தற்போதும் நாம் அவ்வாறான சூழலில் இருக்கின்றோம்.
நாமல் ராஜபக்சே தற்போது தேசிய அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார் அவரின் தலைமையில் இளம் சமூகத்தினர் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து பயணிக்க காத்திருக்கின்றனர்.
தற்போது உள்ள அரசாங்கத்தின் வாக்குறுதிகள் மற்றும் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள மக்கள் சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டு அவர்களை தெரிவு செய்யக்கூடிய சூழல் காலத்தில் காணப்படுகிறது. எனவே உள்ளூராட்சி தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்படும்.
எனவே எமது பயணத்தில் தமிழ் இளையோர் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம். இளையோர் தங்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்ப்பு அரசியல் மட்டுமே எமது அரசியல் , இணக்க அரசியல் சாப கேடு என பலர் நினைக்கின்றனர் அவ்வாறு இல்லை. அரசியல் என்பதற்குள் ஒன்றாக பயணிக்க வேண்டிய தேவையுள்ளது.
தூர நோக்குடன் நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் பயணிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.