Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட சுதந்திரக்கட்சி, மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரீஸ் தலைமையில் சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய தீப் லொக்கு பண்டார இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,நானாட்டான் பிரதேச சபை ,முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
மன்னார் பிரதேச சபை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமையால் மன்னார் பிரதேச சபைக்கான தேர்தல் குறித்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையிலே சுதந்திரக்கட்சி மன்னார் மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது.
இம்முறை சுதந்திரக்கட்சி கூட்டாக இணைந்து போட்டியிடுவதனால் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
இதனிடையே கிளிநொச்சி மாவட்ட பெரமுன அமைப்பாளராக ஊடகவியலாளர் மதன் பொறுப்பேற்றுள்ளார்.அவர் முன்னதாக கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.