Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை இடைநிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்த ஒரு சில மணிநேரத்தின் பின்னர் உக்ரைன் பேச்சுவார்த்தை மேசைக்கு வரத் தயாராக உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
ரஷ்யாவுடன் நீடித்த அமைதிக்கான தேடலில் உக்ரைன் முடிந்தவரை விரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு வரத் தயாராக உள்ளது என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஜெலென்ஸ்கி எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
அமைதிக்கான உக்ரைனின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நம்மில் யாரும் முடிவில்லாத போரை விரும்பவில்லை. நீடித்த அமைதியை நெருங்கி வர உக்ரைன் விரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு வரத் தயாராக உள்ளது. உக்ரைனியர்களை விட வேறு யாரும் அமைதியை விரும்பவில்லை. நீடித்த அமைதியைப் பெற ஜனாதிபதி டிரம்பின் வலுவான தலைமையின் கீழ் பணியாற்ற நானும் எனது குழுவும் தயாராக இருக்கிறோம்.
போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் விரைவாக உழைக்கத் தயாராக இருக்கிறோம். முதல் கட்டங்கள் கைதிகளை விடுவித்தல் மற்றும் வான்வெளியில் போர் நிறுத்தம். ஏவுகணைகள், நீண்ட தூர ட்ரோன்கள், எரிசக்தி மற்றும் பிற சிவிலியன் உள்கட்டமைப்பு மீதான குண்டு வீச்சுக்களை நிறுத்துதல். ரஷ்யாவும் அவ்வாறே செய்தால் கடலிலும் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவருதல்.
பின்னர் அடுத்த கட்டங்கள் அனைத்தையும் கடந்து மிக வேகமாகச் சென்று ஒரு வலுவான இறுதி ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.
உக்ரைனின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பராமரிக்க அமெரிக்கா எவ்வளவு உதவி செய்துள்ளது என்பதை நாங்கள் உண்மையிலேயே மதிக்கிறோம்.
ஜனாதிபதி டிரம்ப் உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்ப ஆயுதமான யவலின் வழங்கியபோது விடயங்கள் மாறிய தருணத்தை நாங்கள் நினைவில் கொள்கிறோம். இதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் எங்கள் சந்திப்பு, அது நடக்க வேண்டிய வழியில் நடக்கவில்லை. அது இப்படி நடந்தது வருத்தமளிக்கிறது. விடயங்களைச் சரி செய்ய வேண்டிய நேரம் இது. எதிர்கால ஒத்துழைப்பும் தகவல் தொடர்பும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
கனிமங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, உக்ரைன் எந்த நேரத்திலும், எந்த வசதியான வடிவத்திலும் கையெழுத்திடத் தயாராக உள்ளது. இந்த ஒப்பந்தத்தை அதிக பாதுகாப்பு மற்றும் உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை நோக்கிய ஒரு படியாக நாங்கள் பார்க்கிறோம். மேலும் இது திறம்பட செயல்படும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன் என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.