Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மீனவர் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரியுள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க இந்திய மத்திய அரசும் தமிழக நிர்வாகமும் தங்கள் சொந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டும் .வடக்கு மக்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த வாழ்வாதாரம் அவர்களிடமிருந்து பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய அரசாங்கத்தையும், தமிழக அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வளவு உதவி செய்திருந்தாலும், மீனவர்கள் பிரச்சினையில் வடக்கின் மக்களுக்கு உதவத் தவறினால், அது உண்மையில் உதவியா என்ற கேள்வி எழுகிறது.
மக்களுக்கு உதவுவது என்பது வெறும் வெள்ள நிவாரணத்தை விநியோகிப்பதல்ல் அவர்கள் சுயமாக நிற்க வாய்ப்புகளை உருவாக்குவதாகும்” என்றும் ரத்நாயக்க இந்திய அரசாங்கத்தின் உதவி திட்டங்களினை விமர்ச்சித்துள்ளார்.