Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் ரக வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் , மற்றுமொருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினை பொலிஸார் மறித்த போது , பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை சாரதி தொடர்ந்து செலுத்தி செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
அதில் ஒருவர் காயமடைந்த நிலையில் , மற்றையவர் டிப்பர் வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பியோடியுள்ளார்.
காயமடைந்தவரை பொலிஸார் கைது செய்து , பொலிஸ் பாதுகாப்புடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை தப்பியோடிய நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.