Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் பெருமளவு தமிழ் மக்களது நிலங்கள் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள இராணுவ முகாங்களான முறக்கொட்டான் சேனை, பாலையடி வட்டை, குருக்கள் மடம், காயங்கேணி, மற்றும் விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட புதூர் என்பவை தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களாகும்.
அதே போன்று தாண்டியடி துயிலும் இல்லம், அதனுடன் களுவாஞ்சிக்குடி காவல் நிலையம் போன்று மக்களுக்கு வழங்கப்படவேண்டிய மற்றும் மக்களுக்கு சொந்தமான வாகரை பிரதேச அரச காணிகளில் அநேகமானவை இரானுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகின்றது.இவை உட்பட்ட பல பொது மக்களுக்கு சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கையை இரா.சாணக்கியன் முன்வைத்துள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி அதற்கான குழு ஒன்றினை நியமிப்பது தொடர்பில் ஆராய்வதாக உறுதி அளித்தார்.அதனுடன் கடந்தகாலத்தில் திரிபோலி ஆயுத படைப்பிரிவினால் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் தொடர்பான சாட்சிகளை விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்திருந்தேன் அதனையும் உடனடியாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.