Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தந்தையார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
உயிரிழந்த பிரதேச செயலக உதவி பிரதேச செயலரின் தந்தையான பி. சண்முகராசா , தனது மகளின் உடலில் தீ பற்றியமை தொடர்பில் சந்தேகம் உள்ளதாக கடந்த 23ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவரது மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் இது ஒரு இயற்கையான நிகழ்வு அல்ல, மாறாக ஒரு சந்தேகத்திற்குரிய கொலை என்பதை வலுவாகக் காட்டுகின்றன.
இத்தகைய குற்றத்தின் கடுமையான தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை விரைவில் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறோம் என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பின்னணி.
தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் கடந்த 17ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஆறு மாத கர்ப்பிணியான சதீஸ் தமிழினி (வயது 33) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி படுக்கையறையில் இருந் நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியமையால் , தீக்காயங்களுக்கு உள்ளானார் என சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
அதேவேளை இவரை காப்பாற்ற முற்பட்ட நிலையில், கணவரும் சிறு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார்.