Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமியின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று , சாட்டி இந்து மயானத்தில் அவரது புகழுடல் தகனம் செய்யப்பட்டது.
தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை காலமானார்.
அன்னாரது புகழுடல் வெள்ளிக்கிழமை முதல், யாழ்ப்பாணம் , நல்லூர் செட்டித்தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் , அரசியல் தலைவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , ஆலய தர்ம கார்த்த சபையினர் , ஊடகவியலாளர்கள் , வைத்தியர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்று , அஞ்சலி உரைகள் நிகழ்வுகள் இடம்பெற்று , தகன கிரியைக்காக வேலணை சாட்டி இந்து மயானத்திற்கு புகழுடல் எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.