Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கல்ஓயா பகுதியில் மீனகாய கடுகதி ரயிலில் யானைக் கூட்டம் மோதியதால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இன்று (20) அதிகாலை யானைக் கூட்டம் ஒன்று மோதியதில் ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஐந்து காட்டு யானைகள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, மட்டக்களப்பு மார்க்கத்தில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படவிருந்த புலதிசி ரயிலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தடம் புரண்ட ரயிலின் இயந்திரத்தை மீள் தடமேற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன