ரஷ்யா – உக்ரேன் போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள சிறப்புப் பிரிவு !

by admin

ரஷ்யா – உக்ரேன் போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள சிறப்புப் பிரிவு !

ரஷ்ய – உக்ரேன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை பாதுகாப்புப் படை வீரர்களைச் சட்டவிரோத வழிகளில் ஆட் கடத்தல் செய்தல் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கு விசேட பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, பல்வேறு வழிகளில் ரஷ்ய – உக்ரேன் போருக்கு சம்பந்தப்பட்டுள்ள ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அங்கத்தவர்கள் தொடர்பில், அவர்கள் சென்ற திகதிகள், அதனுடன் தொடர்புடைய நபர்கள், நிறுவனங்கள், தொலைபேசி எண்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு தொலைபேசி எண் 0112 441 146 ஊடாக பெற்றுத்தருமாறு பாதுகாப்புச் செயலாளர் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இந்த ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் அல்லது அதற்கு ஆதரவளிக்கும் நபர்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு நபர்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு அவ்விவரங்களைத் தெரிவிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படுவதனால், இது தொடர்பில் அனைவரும் விசேட கவனம் செலுத்தி, தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்