ஜனாதிபதி தேர்தல் குறித்து அரசியல் வட்டாரங்களின் கருத்து !

by admin

ஜனாதிபதி தேர்தல் குறித்து அரசியல் வட்டாரங்களின் கருத்து !

பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவது குறித்த அரசியல் கலந்துரையாடலை முறியடிக்கும் ஒரு நடவடிக்கையாகவே தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் குறித்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது என அரசியல் வட்டாரங்கள் கருதுவதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் அடுத்த கட்ட நிதி உதவி கிடைக்காத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துவதுகுறித்து ஜனாதிபதி ஆராய்வார் என தகவல்கள் வெளியாகின்றன என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

எனினும் நேற்யை அறிவிப்பில் தேர்தல்கள் ஆணையகம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சட்டவிதிகளை அறிவித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள டெய்லிமிரர் பொதுத்தேர்தல்கள் குறித்த இரகசிய திட்டங்களை முறியடிக்கவே தேர்தல்கள் இடம்பெறவேண்டிய காலப்பகுதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது எனவும்குறிப்பிட்டுள்ளது.

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பொதுத்தேர்தல் இடம்பெற்றால் வளங்கள் அற்ற நிலைக்கு தள்ளப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு கருதுகின்ற அதேவேளை ஜனாதிபதியின் அறிவிப்பு எதனையும் நிராகரிக்க முடியாது சட்டத்தில் அதற்கு இடமில்லை என கருதுகின்றது எனவும் டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்