ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பண தொகையை அதிகரிக்க தீர்மானம் !

by admin

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பண தொகையை அதிகரிக்க தீர்மானம் !

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பண தொகையை மிக பாரிய அளவில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பணத்தை அதிகரிப்பது தெரடர்பான யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதானி ஏ.எல்.ரட்ணாயக்க தெரிவித்துள்ளார்.

பொது மற்றும் சிவில் அமைப்புக்களிடமிருந்து இது தொடர்பான யோசனைகள் கோரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கட்டுப்பணத் தொகையை அதிகரிக்க வேண்டுமென தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றம், சட்ட மாஅதிபர் திணைக்களம், ஏனைய பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரின் யோசனைகளின் அடிப்படையில் இதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தனித்து இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசியல் கட்சியொன்றின் வேட்பாளரது கட்டுப்பணத் தொகையை 2.4 மில்லியன் ரூபாவாகவும், சுயாதீன கட்சி வேட்பாளரின் கட்டுப்பணத் தொகையை 3.1 மில்லியன் ரூபாவாகவும் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக, முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியொன்றின் வேட்பாளர் தற்பொழுது 50,000 ரூபாவையும் சுயாதீன குழுவொன்றின் வேட்பாளர் 75,000 ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. குறிப்பிட்ட ஒரு வகுப்பைச் சேர்ந்த சமூகத்தினர் அரசியலில் ஈடுபடுவதை வரையறுக்கும் நோக்கில் இவ்வாறு கட்டுப்பணத் தொகை அதிகரிக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்