இன்றைய ராசிபலன்கள் 09.05.2024

by admin

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி உண்டாகும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

காலையில் சற்று சோர்வாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவை யைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். விநாயகர் வழிபாடு நன்று.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கிய முடிவு களை எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். அம்பிகை வழிபாடு நலம் சேர்க்கும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் அனுசரணை யாக நடந்துகொள்வார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அம்பிகையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சி களைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத் தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. சிவபெருமானை வழிபடுவது நன்று.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு ஏற்படும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆனால், போதுமான பணம் இருப்ப தால் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மாலையில் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடிவது மகிழ்ச்சி தரும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். மற்ற வர்களுக் குக் கொடுத்து வராமல் இருந்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவர வுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விநாயகரை வழிபடுவது நன்று.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். அதிகப்படியான செலவுகள் ஏற் பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும் பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். தந்தையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மகர ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். அம்பிகையை வழிபடுவது நலம் சேர்க்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் உண்டாகும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

கும்பராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மீனராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வீரபத்திர சுவாமியை வழிபடுவது நன்று.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

தொடர்புடைய செய்திகள்