பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் விளையாட்டு விழா

by admin

பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் விளையாட்டு விழா

ரவிப்ரியா

74 வருட கல்வி வரலாற்றைக் கொண்ட பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் விளையாட்டுவிழா செவ்வாயன்று மாலை அதிபர் வி.புவிவாணன் தலைமையில் நடைபெற்றது. நீண்ட கால இடைவெளியின் பின்னர் இடம்பெற்ற இந்த விளையாட்டு போட்டிக்கான அனுசரணையை லண்டனில் வதியும் பெரியகல்லாற்றைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுஜித் என்பவர் முழுமையாக வழங்கியது சிறப்பம்சமாகும்.  

சிறுவர்களின் சிறப்பான பாண்டு வாத்தியத்துடன் அதிதிகள் மாலையணிவித்து வரவேற்கப்பட்டதுடன் சம்பிரதாயப்படி மங்கல விளக்கேற்றி விளையாட்டு விழா ஆரம்பமானது. ஒலிம்பிக் தீபம் விளையாட்டு வீரர்களால் எடுத்து வரப்பட்டு ஏற்றி வைக்கப்பட்டது.

பிரதம விருந்தினர்களாக பட்டிருப்பு வலய கோட்டக் கல்விப் பணிப்பாளரும் பிரதி கல்விப் பணிப்பாளருமான பி.திவிதரன் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் சஞ்சய் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஆன்மீக அதிதிகளாக புனித அருளானந்தர் ஆலய அருட்பணி அன்ரன் டொன்ஸ் றாகல் கெத்செமனே சுவிஷேச சபை பாஸ்ரர் அமலதாஸ் ஆகிய இருவருனிதும் ஆசீர்வாதத்துடன் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியது.

விசேட அதிதிகளாக பாடசாலை அதிபர்களும். சிறப்பு அதிதிகளாக பல முக்கியஸ்தர்களும் பிரசன்னமாகியிருந்தனர். உரிய முறைப்படி விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மரியாஇ மற்றும் பிறிற்றோ ஆகிய இரு இல்லங்களுக்கிடையேயான விறுவிறுப்பான போட்டிகள் மூலம் மாணவர்களின் திறமைகள் அரங்கேற்றமாகியது. விளையாட்டு வீர்கள் மிகவும் உற்சாகமாக போட்டிகளில் பங்கேற்றனர். பார்வையாளர்களை போட்டிகள் பரவசப்படுத்தியது.

இங்கு உரையாற்றிய இரு பிரதம விருந்தினர்களும் சிறுவர்கள் குறுகிய கால பயிற்சியில் மிகவும் நேர்த்தியாக பாண்டு வாத்தியங்ளை இசைத்ததாக புகழாரம் சூட்டினர். அத்துடன் பெரிய பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டிகளுக்கு நிகராக இந்த விளையாட்டுப் போட்டி வடிவமைக்கப்பட்டதையும் பாராட்டிப் பேசினர்.

மேலும் பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பங்களிப்பு முன் உதாரணமாக இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்ததுடன். தனி ஒருவரால் இதற்கான அனுசரணை முற்றுமுழுதாக அளிக்கப்பட்டமையானதும் நல்லதொரு  வரலாற்றுப்  பதிவெனவும் சுட்டிக் காட்டினர்

இறுதியில் அதிதிகளால் மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன..      

தொடர்புடைய செய்திகள்