அகில இலங்கை விஞ்ஞான போட்டி நிகழ்ச்சியில் மஹ்மூத் மகளிர் கல்லூரி இருமொழி பிரிவு மாணவி முதலிடம் !

by admin

அகில இலங்கை விஞ்ஞான போட்டி நிகழ்ச்சியில் மஹ்மூத் மகளிர் கல்லூரி இருமொழி பிரிவு மாணவி முதலிடம் !
(நூருல் ஹுதா உமர்)

“சிறந்த எதிர்காலத்திற்கான STEAM கல்வி” எனும் தொனிப் பொருளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தேசிய விஞ்ஞான அறக்கட்டளையால் எதிர்கால இலங்கைக்கான STEAM கல்வி எனும் தலைப்பின் கீழ் நடாத்தப்பட்ட பாடசாலை விஞ்ஞான போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யில் தரம் 09 H இருமொழி பிரிவில் கல்வி கற்கும் மாணவி பீ(B)னா தானீன் முஹம்மது நெளஷத் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கட்டுரையான “சிறந்த எதிர்காலத்திற்கான STEAM கல்வி” என்ற கருப்பொருளில் ஆங்கில மொழி பிரிவின் கீழ் அகில இலங்கை ரீதியில் முதல் நிலையினைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாணவி பீ(B)னா தானீன் விதிவிலக்கான திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளார். இந்த சாதனை பீ(B)னாவின் குறிப்பிடத்தக்க திறன்களை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், கல்வியில் புதுமை மற்றும் சிறந்து விளங்கும் எங்கள் கல்லூரியின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. உங்களின் வெற்றியினால் கல்லூரி பெருமிதம் அடைகின்றது. ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் என பாடசாலை அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்