வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!

by admin

on Saturday, May 04, 2024

வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கான அபராதத்தை 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கான வரைவு திட்டம் போக்குவரத்து அமைச்சினால் சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

3,200 தொலைதூர சேவை பஸ்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஒழுங்குமுறையின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், பயணிகள் பெரும்பாலும் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களில் ஏற்றிச் செல்லப்படுகிறனர் .

குறிப்பாக, வெள்ளவத்தை மற்றும் மருதானையை அண்மித்த பகுதிகளில் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்கள் நிறுத்தப்பட்டு சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லப்படுகின்றனர் .

அவ்வாறான பல பஸ்களின் சாரதிகளைக் கைது செய்து வழக்குத் தொடர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படும் பஸ் சாரதிகளுக்கு ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

தொடர்புடைய செய்திகள்