கனேடிய பிரதமரை விசர் என திட்டிய எதிர்க்கட்சி தலைவர்!

by admin

 கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு விசர் பிடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பியோ பொலியேவ் திட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகளின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் பிரதமரை தகாத முறையில் திட்டிய எதிர்க்கட்சித் தலைவரை, சபாநாயகர் கிரெக் பர்குஸ் அவையிலிருந்து வெளியேற்றியிருந்தார்.

பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொக்கேய், ஹெரோயின் போன்ற போதைப் பொருள் பயன்பாடு தொடர்வில் நடைபெற்ற விவாதத்தில் இந்த சர்ச்சை நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித்தலைவர் பின்னர் மீண்டும் அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

நாடாளுமன்றில் உறுப்பினர்களை இழிவுப்படுத்தக் கூடிய வகையிலான வார்த்தைப் பிரயோகங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு விமர்சனங்களை வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்படுவர்.

இதன் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் வெளியேற்றப்பட்டிருந்தார்.

எனினும், சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளதாகவும் இதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்