கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய நடாத்திய சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா

by admin

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய நடாத்திய சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா

on Sunday, April 28, 2024

 (பாறுக் ஷிஹான்)

கல்முனை தலைமைய பொலிஸ் நிலையம்  நடாத்திய சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில்  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.

கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு விழாவினை ஆரம்பித்து வைத்தார்.

இங்கு பாரம்பரிய புத்தாக்க பண்பாட்டுக்  கலை கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் விளையாட்டு விழாக்கள்  நடைபெற்றன.தேசிக்காய் ஓட்டம், முட்டி உடைத்தல்,சாக்கு ஓட்டம்,பலூன் உடைத்தல்,கயிறு இழுத்தல்,சங்கீதக் கதிரை,பின்னோக்கி ஓடுதல்,சமனிலை ஓட்டம் போன்ற விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன. இதில் பொலிஸாரின் குடும்ப சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள், ஆண்கள்,பெண்கள் என பல பிரிவினருக்கும் போட்டிகள் வெவ்வேறாக நடத்தப்பட்டன.

 போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளினால் பரிசுகள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டது மேலும் பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச்செயலாளரும் காணி மத்தியஸ்த சபை பிரதான மத்தியஸ்தருமான எம்.ஐ.எம் ஜிப்ரி (எல்.எல்.பி) மற்றும் ஆலோசனை குழுவின் உறுப்பினர்கள் உட்பட  விளையாட்டு கழகங்கள் பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும்   சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்