உக்ரைன் படைகள் பின்வாங்கப்பட்டதை ஒப்புக் கொண்டார் இராணுவத்தின் தலைமைத் தளபதி

by admin

பல ரஷ்ய தாக்குதல்களுக்கு முகங்கொடுத்த நிலையில் முன்னணியில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக உக்ரைன் இராணுவத்தின் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி இன்று டெலிகிராம் செய்தி சேவையின் ஒரு இடுகையில் கூறியுள்ளார்.

கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நிலைகளில் இருந்து உக்ரேனியப் படைகள் வாபஸ் பெற்றுள்ளதாக ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்தார்.

முன்னில் நிலைமை மோசமாகிவிட்டது என்று கூறினார். பெப்ரவரியில் ரஷ்யா அவ்திவ்காவைக் கைப்பற்றிய பின்னர் நிறுவப்பட்ட தற்காப்புக் கோட்டின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள சில நிலைகளில் இருந்து உக்ரேனியப் படைகள் பின்வாங்கியதை அவர் உறுதிப்படுத்தினார்.

மாஸ்கோ சில துறைகளில் தந்திரோபாய வெற்றிகளைப் பெற்றது என்று அவர் கூறினார்.

இழப்புகளைச் சந்தித்த பிரிவுகளுக்குப் பதிலாக ஓய்வு பெற்ற உக்ரேனியப் படைகள் அந்தப் பகுதிகளில் மாற்றிவிடப்பட்டன.

அவ்திவ்காவைக் கைப்பற்றிய பின்னர் ரஷ்ய இராணுவம் அடைய முயற்சிக்கும் சாசிவ் யாரைச் சுற்றி பெரும்பாலான சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

அவ்திவ்காவிற்கு வடக்கே சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள நோவோபக்முதிவ்கா கிராமத்தை அதன் துருப்புக்கள் கைப்பற்றியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னதாக அறிவித்தது.

உக்ரைனுக்கு $61 பில்லியன் இராணுவ உதவியை அமெரிக்கா கடந்த வாரம் ஒப்புக்கொண்டது.

ஆனால் உக்ரேனிய துருப்புக்கள் பல மாதங்களாக வெடிமருந்துகள், துருப்புக்கள் மற்றும் வான் பாதுகாப்பு பற்றாக்குறையுடன் போராடி வரும் முன்னணிப் பகுதிகளுக்கு புதிய அமெரிக்க ஆயுதங்கள் இன்னும் செல்லவில்லை.

இந்த வாரம் உக்ரைன், இஸ்ரேல் மற்றும் தைவானுக்கான $95bn உதவிப் பொதியில் காங்கிரஸில் உள்ள சிலரது எதிர்ப்புக்கு மத்தியில் பல மாத நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கையெழுத்திட்டார்.

பிப்ரவரி 2022 மற்றும் ஜனவரி 2024 க்கு இடையில் அமெரிக்கா உக்ரைனுக்கு $40 பில்லியனுக்கும் அதிகமான இராணுவ உதவியை வழங்கியது.

தொடர்புடைய செய்திகள்