ஆள் கடத்தல், கொலை மிரட்டல்: பி.வி.நரசிம்மராவின் கின்னஸ் சாதனை வெற்றி எப்படி சாத்தியமானது தெரியுமா?

நந்தியாலில் பி.வி.நரசிம்ம ராவ் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பல்லா சதீஷ்
  • பதவி, பிபிசி தெலுங்கு செய்தியாளர்

“நான் விடுதி வாசலில் இறங்கி ஜன்னல் வழியாகப் பார்த்த போது, காங்கிரஸ் தலைவர் ஒருவரின் விருந்தினர் மாளிகைக்கு அருகில் ஏகே 47 துப்பாக்கிகள் ஏந்தியபடி சிலர் காவலுக்கு நிற்பதைக் கண்டேன். பி.வி.யின் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் துப்பாக்கி ஏந்தி நிற்பதாக நான் நாளிதழுக்கு செய்தி எழுதியபோது, எனது பாதுகாப்புக்காக லாட்ஜை காலி செய்யும்படி சொன்னார்கள்.

“நான் கலெக்டரைச் சந்திக்கச் சென்றபோது, மிகவும் வலிமையான ஆண்கள் சிலர் நடுத்தர வயதுடைய ஒருவரை அடித்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த யாருமே தடுக்கவில்லை. அவரை அடித்து லாரியில் ஏற்றிச் சென்றனர். அது யார் என்று விசாரித்ததில், வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளரை காங்கிரஸ் கட்சியினர் அடித்து உதைத்ததாக தெரிவித்தனர்.

அங்கு தேர்தல் தொடர்பான செய்தி சேகரிப்பில் நேரடியாகப் பங்கேற்ற சில ஊடகவியலாளர்களின் அனுபவங்கள் இவை.

பிவி நரசிம்மராவ் பிரதமரான பிறகு நந்தியாலா தொகுதியில் இருந்து எம் பி யாக வெற்றி பெற்றது மிகப்பெரிய சாதனை. அந்த காலகட்டத்தில் இந்த சம்பவம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. எதிரணியினருக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை என்பதை தாண்டி, பி.வி.க்கு கிடைத்த 89 சதவீத வாக்குப்பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உண்மையில் சொல்ல வேண்டும் எனில், அப்போது காங்கிரஸ் கட்சி உண்மையான தேர்தலை நடத்தாமல் வெற்றி பெற முயற்சித்தது. ஆனால் அது சாத்தியப்படவில்லை.

கர்னூலில் தேர்தலை உன்னிப்பாக கவனித்தவர்கள் கூறுகையில், “இங்கு பி.வி.க்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என யாரும் போட்டியிடவில்லை. போட்டியிட முயற்சித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டனர், கடத்தப்பட்டனர் மற்றும் கொல்லப்பட்டனர். ஆட்கடத்தல்கள், துப்பாக்கிகள், மிரட்டல்களுக்கு மத்தியில் பி.வி., தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல்களில் பின்பற்றப்பட்ட ஜனநாயக விரோத நடைமுறைகள் பற்றிய விஷயம் இருட்டடிப்பு செய்யப்பட்டது” என்றார்கள்.

கிராம பஞ்சாயத்துகள் தவிர, நாடாளுமன்ற தொகுதிகளில் ஒருமித்த கருத்து ஏற்படுவது அரிது. ஆனால், தற்போதைய மக்களவை தேர்தலில், குஜராத் மாநிலத்தின் சூரத் மக்களவைத் தொகுதி ஒருமனதாக இருக்கும் சூழலில், பி.வி.யின் பிரச்னை முன்னுக்கு வந்துள்ளது.

ஆனால், தற்போதைய மக்களவைத் தேர்தலில், குஜராத் மாநிலத்தின் சூரத் மக்களவைத் தொகுதி ஒருமனதாக போட்டியின்றி ஒருவர் வெற்றி பெற்றிருக்கும் சூழலில் முந்தைய காலகட்டத்தில் இதே போன்று நடந்த பி.வி., தேர்தல் நினைவுக்கு வருகிறது. அப்போது, பி.வி., தேர்தலில் தெலுங்கு இனத்தின் மகிமையும், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கும் பிரதிபலித்தது.

அந்த புகழுக்கும் செல்வாக்குக்கும் பின்னணியில், கண்ணுக்கு தெரியாத தீமைகளும், ஜனநாயக விரோத செயல்களும் நடந்ததாக பல ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

மனித உரிமைப் போராளியான மறைந்த கே.பாலகோபால், 1991 நவம்பர் 16 தேதியிட்ட ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி’ இதழில் இது குறித்து நீண்ட கட்டுரை எழுதினார்.

பி.வி.க்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்ய நினைத்தவர்களை காங்கிரஸ் தலைவர்கள் எப்படி மிரட்டினார்கள் என்பதை விரிவாக எழுதியுள்ளார். மேலும் மிரட்டல், அடிதடி தான் அந்தத் தேர்தலில் பி.வி.க்கு இவ்வளவு பெரும்பான்மையைப் பெற வழிவகுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மட்டுமின்றி, வேட்புமனு தாக்கல் செய்ய பலர் விரும்பியதாக பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட்டனர். அந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களும் தங்கள் அனுபவங்களை செய்திகளில் பகிர்ந்து கொண்டனர்.

“அந்த சமயத்தில் பிவி நரசிம்மராவ் போட்டியிட்ட ஆந்திரா தேர்தலில் போட்டியிட நானும் அங்கு சென்றேன். முதல் நாளே நந்தியாலா தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தேன். எனக்கு ஆதரவாக என்னுடன் வந்தவர், நான் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததாக எதிரணியிடம் (காங்கிரஸ்காரர்களிடம்) கூறினார்.

“வேட்பு மனு தாக்கல் செய்தேனா இல்லையா என்பதை கூட அவர்கள் கேட்கவில்லை, விஷயத்தை கேள்விப்பட்டதுமே, சிலர் என்னை ஜீப்பில் கடத்திச் சென்றனர். நான் மூன்று நாட்கள் ஒரு மலைப்பகுதியில் தங்க வைக்கப்பட்டேன். என்னுடைய பணம், தங்கம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஒருவரைக் காவலுக்கு அனுப்பினார்கள்.

அந்தத் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற பி.வி.நரசிம்மராவ் கோஷ்டி என்னைக் கடத்தியது. ஆனால் அங்கு பாஜக வேட்பாளரும் போட்டியிட்டதால், என்னைப் பற்றி அவர்கள் பெரிதாக கவலைப்படவில்லை. அந்த பாஜக தலைவரின் வேட்புமனு விவகாரத்தை கேட்டு, அவர்கள் அங்கு சென்று விட்டனர். நான் அந்த சூழலை பயன்படுத்தி தப்பித்து விட்டேன். உடனே நந்தியாலா காவல் நிலையம் சென்று புகார் அளித்தேன். அப்போதுதான் நான் கடத்தப்பட்டது வெளி உலகத்துக்குத் தெரிய வந்தது. அங்கிருந்த காவல்துறையினர் என்னுடன் காவலர்களை அனுப்பி வைத்தனர். நான் பத்திரமாக தமிழகத்திற்கு வந்து சேர்ந்தேன்.” என்றார் பத்மராஜன். அவர் அடிக்கடி வேட்புமனுத் தாக்கல் செய்து பின்னர் தோற்றுப் போவது வழக்கம். ஆனால் வேட்புமனு தாக்கல் செய்யாமல், கடத்தப்பட்ட திகில் அனுபவ தேர்தலை அவர் மறக்கவில்லை.

நந்தியாலில் பி.வி.நரசிம்ம ராவ் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீனிவாச பிரசாத், அந்தத் தேர்தலில் தனது அனுபவங்களை ‘பர்ஸ்ட் போஸ்ட்’ இணையதளத்தில் எழுதிய கட்டுரையில் விவரித்தார்.

“அந்தத் தேர்தலில் செய்தி சேகரிக்க சென்றபோது வெடிகுண்டுகள், ஏகே 47 துப்பாக்கிகள், பெண்களுக்குப் புடவைகள், ஆண்களுக்கு சட்டைகள் என்று விநியோகம் செய்தார்கள். நான் இறங்கிய லாட்ஜின் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, விருந்தினர் மாளிகையில் காங்கிரஸ் தலைவர் ஒருவருக்கு காவலாக சில ஆண்கள் இருப்பதைக் கண்டேன். ஏகே 47 துப்பாக்கிகளுடன் பி.வி.யின் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் துப்பாக்கி ஏந்தி இருப்பதாக நானும் வேறு சில பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டவுடன், எனது பாதுகாப்பிற்காக லாட்ஜை காலி செய்யச் சொன்னார்கள்” என்று ஸ்ரீனிவாச பிரசாத் 2017 இல் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

“உண்மையில், தெலுங்குதேசம் கட்சி போட்டியிலிருந்து வெளியேறிவிட்டதால், அங்கு பிவி வெற்றி பெறுவது மிகவும் எளிதானது. இருப்பினும், காங்கிரஸ் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை. நாட்டில் பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற விரும்புவதாக அங்கிருந்த தலைவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

சீனிவாச பிரசாத் தனது கட்டுரையில், அங்கிருந்த வாக்காளர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தபோது, மறுபுறம் காங்கிரஸுக்கு வாக்களிக்கக் கூடாது என்று எண்ணியவர்கள் தாக்கப்பட்டனர் என்கிறார்.

”நான் கலெக்டரைச் சந்திக்கச் சென்றபோது, மிகவும் வலிமையான ஆண்கள் சிலர் நடுத்தர வயதுடைய ஒருவரை அடித்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த யாருமே தடுக்கவில்லை. அவரை அடித்து லாரியில் ஏற்றிச் சென்றனர். அது யார் என்று விசாரித்ததில், வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளரை காங்கிரஸ் கட்சியினர் அடித்து உதைத்ததாக தெரிவித்தனர்

ஜன்னலில் இருந்து மொத்த சண்டையையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் தேர்தல் அதிகாரியிடம் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டால், புகார் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறார்” என சீனிவாச பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

நவம்பர் 1991 இல் பிரபல பத்திரிகையாளர் அமர்நாத் கே.மேனனும் ‘இந்தியா டுடே’ இதழுக்கான தனது செய்திக் கட்டுரையில் இவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

பல சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும், ராயலசீமா விவசாயி சங்க தலைவர் சீலம் சஞ்சீவ ரெட்டியும் வேட்புமனு தாக்கல் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டதாகவும் அமர்நாத் ‘இந்தியா டுடே’ நாளிதழில் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைவர்கள் பலரை மிரட்டி தேர்தலை போட்டியின்றி நடத்த முயன்றதாக அவர் எழுதியுள்ளார்.

நந்தியாலில் பி.வி.நரசிம்ம ராவ் வெற்றி

பட மூலாதாரம், GANGULA PRATHAP REDDY/FACEBOOK

பிவி ஏன் நந்தியாலில் போட்டியிட்டார்?

1991 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸிலிருந்து கங்குலா பிரதாபர ரெட்டி வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதற்கு முன், ராஜீவ் காந்தி பிரசாரத்தின் போது உயிரிழந்தார். தேர்தலுக்குப் பிறகு பி.வி.நரசிம்மராவ் பிரதமரானார். ஆனால், அப்போது அவர் எம்பி ஆகவில்லை.

பிரதமராக வருபவர்கள் எம்பியாக வெற்றி பெற வேண்டும். எனவே அவருக்காக கங்குலாவில் பிரதாப் ரெட்டியின் நந்தியாலா தொகுதி காலி செய்யப்பட்டது.

பி.வி.க்கு மிகவும் நெருக்கமான கர்னூல் முன்னாள் முதல்வர் கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி, நந்தியாலா தொகுதியில் பி.வி.யை போட்டியிட வைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். தன்னை பிரபலம் என்று கூறிக்கொள்ளும் பிவி ராஜ்யசபாவில் இருந்து போட்டியிடாமல், ஏன் மக்களவையின் இருந்து போட்டியிட்டார்?

பிவி தெலுங்கானாவில் இருந்தும் போட்டியிட்டு இருக்கலாம், ஆனால் நக்சலைட்கள் ஏதேனும் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தால், அது சர்வதேச பிரச்னையாக மாறும் (பிரதானி போட்டியிட்டது போல) அதனால்தான் அவர் தெலுங்கானாவில் போட்டியிடவில்லை.

மேலும் தெலுங்கானாவில் அப்போது தெலுங்கு தேசம் வலுவாக இருந்தது. அதனால் அவர் நந்தியாலாவைத் தேர்ந்தெடுத்தார்’ என்று மூத்த பத்திரிகையாளர் நஞ்சராயா பிபிசியிடம் கூறினார்.

கடப்பா தொகுதியிலும் பிவி போட்டியிட வாய்ப்பிருப்பதாக என தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் நந்தியாலாவில் போட்டியிட்டார்.

“உண்மையில், பி.வி.க்கு சொந்த மாவட்டமான கரீம்நகர் உட்பட எங்குமே ஆதரவு இல்லை. இதன் மூலம் அவரை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு ராயலசீமா தலைவர்களின் கைகளில் கொடுக்கப்பட்டது. அனைவரும் ஏகமனதாக நந்தியாலாவில் இருந்து பி.வி.யை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடிவு செய்தனர்” – பாலகோபால் தனது கட்டுரையில் இவ்வாறு எழுதியுள்ளார்.

அந்த இடைத்தேர்தலில் பி.வி.நரசிம்மராவ் 6 லட்சத்து 86 ஆயிரத்து 241 வாக்குகள், அதாவது பதிவான வாக்குகளில் 89.48 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட பங்காரு லட்சுமண் 6.56 சதவீதம் அதாவது 45 ஆயிரத்து 944 வாக்குகள் பெற்றார்.

சுயேச்சையாகப் போட்டியிட்ட எம்.சுப்பாரெட்டி 20,398 வாக்குகளும், மோத்குபள்ளி நரசிம்முலு 2524 வாக்குகளும், ஆர்.கிருஷ்ணமூர்த்தி 1684 வாக்குகளும், ஐ.கே.ரெட்டி 1599 வாக்குகளும், ஜி.கே.ரெட்டி 1456 வாக்குகளும் பெற்றனர்.

நந்தியாலில் பி.வி.நரசிம்ம ராவ் வெற்றி

பட மூலாதாரம், GANGULA PRATHAP REDDY/FACEBOOK

வாக்குப்பதிவுக்குப் பின்னால் நடந்த கடத்தல் சம்பவங்கள்

மனித உரிமை ஆர்வலர் பாலகோபால் இந்த சம்பவங்கள் குறித்து பல சுயேச்சை வேட்பாளர்களிடம் பேசி, அந்த விஷயங்களை விரிவாக பதிவு செய்தார்.

1991 அக்டோபர் 11 முதல் 18 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது கர்னூலில் காங்கிரஸ் தலைவர்கள் பல அட்டூழியங்களைச் செய்தார்கள். ஒரு தெலுங்கர் பிரதமரானதால், அவருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மீது கடத்தல் மற்றும் தாக்குதல்கள் நடக்கும் சூழல் உருவானது.

இந்த வேட்பு மனுக்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை அப்போதைய சட்ட அமைச்சர் கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி தனது மருமகன் கொத்தகோட்டா பிரகாஷ் ரெட்டியிடம் ஒப்படைத்தார்.

EPW-வில் பாலகோபால் எழுதியுள்ள விவரத்தில், “அக்டோபர் 10ம் தேதி பி.வி. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. 11 முதல் 18 வரை சுமார் 50-60 பேர் கர்னூல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்தனர். அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார்களா என சோதனை செய்தனர். கலெக்டர் மற்றும் பிற வருவாய்த்துறை அதிகாரிகள், இதுபற்றி யாரேனும் கேள்வி கேட்டால், இங்கு சட்டவிரோதமான நபர்கள் இருப்பதாக எழுத்துப்பூர்வமாக புகார் எதுவும் வரவில்லை என்கின்றனர்.

யாரேனும் வேட்புமனு தாக்கல் செய்ய வருவதாக சந்தேகம் ஏற்பட்டால், அவர்களை அழைத்து வந்து கோட்லா விஜய பாஸ்கர ரெட்டியின் உறவினருக்கு சொந்தமான மாதவி லாட்ஜில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் கொல்லப்பட்டனர். அவர்கள் வேட்புமனு தாக்கல் கடைசி நாளில் விடுபட்டனர்.

பிசிசி செயலாளர் பிரகாஷ் ரெட்டி, கர்னூல் நகராட்சி தலைவர் சுதாகர் பாபு, பிரதிகொண்டா எம்எல்ஏ சேஷி ரெட்டி, கொடுமுரு எம்எல்ஏ மதன கோபால், முன்னாள் எம்எல்சி ரகுராம் ரெட்டி, பிவிக்கு இடத்தை காலி செய்த எம்பி கங்குலா பிரதாப ரெட்டி, கோட்லா விஜய பாஸ்கர ரெட்டியின் மகன் கோட்லா சூர்ய பிரகாஷ் ரெட்டி… இவர்கள் அனைவரும் கலவரங்களிலும் கொலைகளிலும் நேரடியாகப் பங்கேற்றதாக பாலகோபால் பதிவு செய்துள்ளார்.

நந்தியாலில் பி.வி.நரசிம்ம ராவ் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

ஆத்மகூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹனுமந்த ரெட்டி, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அக்டோபர் 14ஆம் தேதி கர்னூலுக்கு சென்றார். அவரை கடத்த முயன்றனர் ஆனால் தப்பித்து கலெக்டர் பங்களாவுக்குள் சென்றனர். இருப்பினும், வேட்புமனு தாக்கல் செய்ய வெவ்வேறு அறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பலர் இப்படி திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கிடையில், பிரகாஷ் ரெட்டி அவரை காலரை பிடித்து வெளியே அழைத்துச் சென்றார். தாலுகா பிரச்னைகள் குறித்து பேசுவதாக கூறி, லாட்ஜில் அழைத்து சென்று அமர வைத்தனர்.

அந்த லாட்ஜில் முதலில் சிறை பிடிக்கப்பட்டவர் ஹனுமந்த ரெட்டி. அதன்பிறகு, ராயலசீமா விவசாயி சங்கத்தின் தலைவர் சீலம் சஞ்சீவ ரெட்டியும் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்பினார். அவரையும் கலெக்டர் அலுவலகம் வெளியே கைது செய்து அழைத்துச் சென்று லாட்ஜில் அடைத்தனர். காக்கிநாடாவைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவருக்கும் அப்படித்தான் நடந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆசிரியர் மஸ்தான் வாலி, மூன்று நாட்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார், ஆனால் பாஜக அவரை முன்னிறுத்த வந்தபோது, அவர் விடுவிக்கப்பட்டார்.

குவாலியரில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஒருவர் இதையெல்லாம் பார்த்துவிட்டு அமைதியாக திரும்பிச் சென்றார். கடத்தப்பட்ட அனைவரும் அக்டோபர் 16 ஆம் தேதி ஹந்த்ரி ஆற்றங்கரையில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு மாற்றப்பட்டனர். கடந்த 18ம் தேதி இரவு காவலர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அவர்கள் தப்பிச் சென்றனர். அங்கிருந்து வழக்கறிஞர் சஞ்சீவா ரெட்டி லாரியில் ஹைதராபாத் வந்தார். இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, முழுக்கதையும் வெளியே வந்தது. ஹனுமந்த ரெட்டி பின்னர் காங்கிரஸின் தொல்லைகளில் இருந்து தப்பிக்க பாஜகவில் சேர்ந்தார்” என்று பாலகோபால் விவரித்துள்ளார்.

“கர்னூல் மீடியாக்கள் இதெல்லாம் தெரிந்தும் செய்தி வெளியிடவில்லை. ஆனால் இதைப் பற்றி எழுத வேண்டும் என்று ஈநாடு இதழில் துணை நிருபர் சூர்யபிரகாஷ் விரும்பினார். அவர் தானே வேட்பு மனு தாக்கல் செய்து , என்ன நடக்கிறது என்பதை செய்தியாக எழுத வேண்டும் என்று நினைத்தார்.

ஆனால் கடந்த 18ம் தேதி காலை 10 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய அவரது வீட்டு முகவரியை உறுதி செய்யாமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். அதனால் கலெக்டரிடம் சென்றார். வேட்புமனு தாக்கல் செய்தால் வாங்கி கொள்வேன். அதை தவிர வேறு எந்த வேலையும் செய்ய மாட்டேன் என கலெக்டர் தெரிவித்தார். எனவே இந்த முழு ஊழலுக்கும் கலெக்டரின் பங்களிப்பு இருப்பதை சூர்யபிரகாஷ் புரிந்து கொண்டார்.

இதையெல்லாம் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சுதாகர் பாபு, சூர்யபிரகாஷின் சட்டையைப் பிடித்து இழுத்து கலெக்டரின் காலில் விழ வைத்தார். அப்போதும் கலெக்டர் எதுவுமே பேசவில்லை. வெளியே சென்றால் கடத்தப்படுவோம் என்பதை உணர்ந்த சூர்யபிரகாஷ், நாள் முழுவதும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விட்டு வேட்புமனு தாக்கல் முடிந்து வெளியே சென்றார்.

இதுகுறித்து பாலகோபால் தனது கட்டுரையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியினரிடம் இதுகுறித்து கேட்டபோது, காங்கிரஸ் தலைவர் ஒருவர் செய்தியாளரிடம் ஒரு கதை சொன்னார்.

ராஜீவை கொன்று இந்தியாவை சீர்குலைக்க வெளிநாட்டு சதி நடக்கிறது. நாளை யாராவது சுயேட்சை வேட்பாளரை கொன்று தேர்தலை தள்ளி வைத்தால் பி.வி., பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என அன்றைய நகராட்சி தலைவர் சுதாகர் பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால், அப்படி ஏதும் வெளிநாட்டு சக்திகள் இல்லை என்பதே உண்மை. உள்ளூர் பிரிவினர் மற்றும் உள்ளூர் சக்திகளின் அரசியல் படுகொலைகள் தான் இதற்குக் காரணம். இது ராயலசீமா கோஷ்டியில் அடிக்கடி நடக்கும்” என்கிறார் பாலகோபால்.

பாலகோபாலின் கருத்துப்படி, இந்த சுயேச்சை வேட்பாளர்களைக் கொல்லப்பட்டுவிடுவோம் என்ற பயமும், கர்னூல் கோஷ்டித் தலைவர்களின் மானமும் இணைந்து அந்தத் தேர்தலில் பி.வி.யின் பல எதிரிகளை போட்டியிடவிடாமல் தடுத்தது.

“அந்தத் தேர்தலில் காங்கிரஸ் நன்றாகவே மோசடி செய்தது. சில இடங்களில் அதிக வாக்குகள் பதிவானால் விதிமுறைப்படி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும். அது தெரிந்து பெட்டியில் போடப்பட்ட வாக்குகளை வாபஸ் பெற்ற சம்பவங்களும் நடந்துள்ளன. எப்படி இருப்பினும் பி.வி.தான் வெற்றி பெற்றிருப்பார். ஆனால், பீகாரில் ஏற்கனவே வெற்றி பெற்ற ராம்விலாஸ் பாஸ்வானின் சாதனையை முறியடிப்பதற்காக பி.வி.க்காக காங்கிரஸ் மோசடி செய்துள்ளது” என்று மூத்த பத்திரிக்கையாளர் நஞ்சராயா பிபிசியிடம் தெரிவித்தார்.

நந்தியாலில் பி.வி.நரசிம்ம ராவ் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

சுயேச்சைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்?

சுயேச்சையாக போட்டியிட விரும்புபவர்கள் மீது உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் கடும் கோபத்தில் இருந்தனர். அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று அவர்களின் பேச்சைக் கேட்காமல் போட்டியிடுவது. மற்றொன்று சுயேச்சை வேட்பாளர்களைக் கொன்றுவிட்டு தேர்தலை தள்ளி வைத்து விடுவார்களோ என்ற பயம்.

1990-களின் தேர்தல் ஆணைய விதிகளின்படி, போட்டியிடும் வேட்பாளர் இறந்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படும். தேர்தலை ஒத்திவைக்க நினைத்தவர்கள் தேர்தலில் போட்டியிடும் பெரிய சுயேச்சை வேட்பாளர்களை கொன்றிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

பிரதமர் பி.வி போட்டியிடுவதால் தேர்தல் தள்ளிப் போகக் கூடாது என்றும், தள்ளிப் போனால் வேறு பிரதமரை தேர்வு செய்ய வேண்டி வரும் என்ற விதியால் அதிக சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்யாமல் பார்த்துக் கொண்டனர் காங்கிரஸ் தலைவர்கள்.

மொத்தத்தில் இந்த சுயேச்சை வேட்பாளர்களின் படுகொலை பயமும், கர்னூல் கோஷ்டி தலைவர்களின் மானமும் அந்தத் தேர்தலில் பி.வி.யை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை தடுத்து நிறுத்தியது. அந்தத் தேர்தலில் சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளும் போட்டியிடவில்லை. பி.வி.யை எதிர்த்து பாஜக மற்றும் இரண்டு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சிகள் மட்டுமே போட்டியிட்டன.

மேலும் சுயேச்சை வேட்பாளராக மோத்குபள்ளி நரசிம்மு போட்டியிட்டார். சுண்டூர் சம்பவத்தை விளம்பரப்படுத்த அவர் போட்டியிட்டார்.

நந்தியாலில் பிவி நரசிம்மராவ் மகத்தான வெற்றி

பட மூலாதாரம், PVNR FAMILY/GOI

“ஆனாலும், பாஜக வேட்பாளரையும், எம்எல் கட்சிகளின் வேட்பாளர்களையும் காங்கிரஸ் தலைவர்களால் ஒன்றும் செய்ய முடியாது, அவர்களை யாராலும் கொல்ல முடியாது என்பது ஒரு தைரியம், இவைதான் அவர்கள் போட்டியிட காரணம்,” என்றார் பாலகோபால்.

ஆனால் இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், தெலுங்கு தேசம் தலைவர் பர்வதனேனி உபேந்திராவின் நெருங்கிய நண்பரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கோட்டி ரெட்டி என்பவர், உள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரை கண்மூடித்தனமாக முன்னிறுத்தினார். அந்த விஷயம் தாமதமாகத்தான் தெரிய வந்தது. பாஜக வேட்பாளருடன் சேர்ந்து ஆட்சியர் அலுவலகம் சென்றதால் அவரை யாரும் வேட்பாளராக அங்கீகரிக்கவில்லை.

விஷயம் தெரிந்ததும், ஆத்திரமடைந்த காங்கிரஸ் தலைவர்கள், ஹைதராபாத்தில், கோட்டிரெட்டியின் மகனை, அக்., 21ல் தாக்கினர். ஆனால், கோட்டிரெட்டியின் மகன் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நந்தியாலாவில் போட்டியிட, தைரியம் உள்ளதா எனக் கேட்டு, அவரது காரை அடித்து நொறுக்கினர். கோட்டிரெட்டிக்கு பெரிய தலைவர்களுடன் தொடர்பு இருந்தது, குறிப்பாக மகபூப்நகரின் ரெட்டி பிரமுகர்களுடன் அவர்களால் எந்தப் பயனும் இல்லை, ஒரு வாரம் கழித்து அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்” என்று பாலகோபால் எழுதினார்.

அப்போதைய பிரதான கட்சியான தெலுங்கு தேசம், தெலுங்கு இனத்தின் பெருமைக்காக பி.வி.க்கு எதிராக போட்டியிடாமல் ஒதுங்கியிருந்தது. ஆனால் பி.விக்கு தெலுங்கு தேசம் ஆதரவளித்ததற்குப் பின்னால் வேறு காரணம் இருப்பதாக ஒரு வாதம் உள்ளது என்கிறார் பால கோபால். பாலகோபால் கூறுகையில், தெலுங்கு தேசம் தலைவர்கள் தங்கள் சொந்த வியாபார நலனுக்காக இதை செய்தார்கள். ஒட்டுமொத்தமாக, அந்தத் தேர்தலின் பின்னணியில் உள்ள வன்முறைகள் வெளிவரவில்லை, மேலும் பி.வி.யின் பெயர் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகப் பதிவாகிவிட்டது.

நந்தியாலில் பி.வி.நரசிம்ம ராவ் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

நீலம் சஞ்சீவ ரெட்டியின் தேர்தலும் இப்படித்தான்..

நீலம் சஞ்சீவ ரெட்டியின் தேர்தலும் இப்படித்தான் நடந்தது என்று பாலகோபால் தனது கட்டுரையில் எழுதியுள்ளார். 1978 ஆம் ஆண்டு தேர்தலில் ஆந்திராவில் காங்கிரஸ் 41 இடங்களை வென்றது. ஜனதா கட்சியை பலப்படுத்திய நீலம் சஞ்சீவ ரெட்டி நந்தியாலாவில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றார்.

இங்கு மக்கள் ஜனதாவுக்கு வாக்களித்ததாக இதற்கு அர்த்தம் கொள்ள முடியாது, இங்குள்ள ரெட்டி தலைவர்கள் அனைவரும் சஞ்சீவ ரெட்டியை வெற்றி பெற வைக்க முடிவு செய்தனர். எந்த அளவுக்கு சென்றார்கள் என்றால், காங்கிரஸுக்கு வாக்களிப்பார்கள் என்ற சந்தேகிக்கப்பட்ட தலித்துகளை லாரிகளில் ஏற்றி நல்லமலா காடுகளுக்கு அழைத்துச் சென்றனர். கிருஷ்ணா நதிக்கரையில், வாக்குப்பதிவு முடியும் வரை அங்கேயே வைத்திருந்தனர், இந்த வழியில் தான் சஞ்சீவ ரெட்டி வெற்றி பெற்றார், பின்னர் ஜனாதிபதியானார்” என்று பாலகோபால் விவரிக்கிறார்.