இஸ்ரேல் – ஈரான் பதற்றங்கள்: சந்தேகத்திற்குரிய பொருள் ஈரானால் தாக்கி அழிப்பு

by admin

ஈரானின் இஸ்பஹானின் வான்வழியில் வந்த சந்தேகத்திற்குரிய பொருளை வான்பாதுகாப்பு அமைப்பு தாக்கிய அழித்ததாக ஈரானிய இராணுவத்தின் இரண்டாவது உயர் அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் சியாவாஷ் மிஹாண்டவுஸ்ட்வை மேற்கோள்காட்டி ஈரானிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. 

குறித்த தாக்குதலில் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என அந்த அதிகாரி தெரிவித்தாார்.

இந்த தாக்குதல் வெளிநாட்டில் இருந்து வந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேநேரம் இஸ்பஹான் அல்லது ஈரானின் வேறு எந்தப் பகுதிக்கும் எதிராக வெளிநாட்டிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை என தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

நாட்டிற்குள் உள்ளிருந்து ஊடுருவியவர்களால் மினி ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டதாக அரசு தொலைக்காட்சியில் தனித்தனியாக, ஒரு ஈரானிய ஆய்வாளர் வாதிட்டார்.

தொடர்புடைய செய்திகள்