ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் கைது

Homeசெய்திகள்

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் கைது

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அ

சவுதி அரேபிய ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் கௌரவிப்பு
தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
உலக மக்கள் தொகையில் பெரும் மாற்றத்தை நோக்கி ஆசியாவும், ஆபிரிக்காவும்…
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு !
“ஓபிஎஸ் தனித்து விடப்படவில்லை… எங்களுடன் தான் இருக்கிறார்!” – அண்ணாமலை


ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் பி.உதயராசா கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை பகுதியில் கடந்த மாதம் 29ஆம் திகதி 04 கிலோ 423 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா தொடர்புப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல்மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  இந்த நிலையில், கொழும்பில் இடம்பெற்றதாக கூறப்படும் பல முக்கிய குற்றச் செயல்களுடன் பி.உதயராசா தொடர்புப்பட்டுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

COMMENTS