ஷிரந்தி ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை


 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை இன்றைய தினம் (03) பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த 27ஆம் திகதி பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் தம்மால் சமூகமளிக்க முடியாது எனவும், அதற்காக இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறும் ஷிரந்தி ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.

Share This