← முகப்பு தமிழ்

வித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனை உறுதியானது.

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 38 பார்வைகள்

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை

மூவரடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி பிரதிவாதிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்களை நிராகரித்து, நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

இருப்பினும், இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மேலும் இரு பிரதிவாதிகளின் தண்டனையை நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூவர் ஸூம் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில், யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா என்ற மாணவி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் யாழ்ப்பாணம் மூவரடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

2017 ஆம் ஆண்டு இவ்வழக்கை விசாரித்த யாழ். மேல் நீதிமன்றம், ஏழு பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாகக் கண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அந்தத் தண்டனையிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர். இம்மேன்முறையீட்டு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
2 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
2 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
4 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
7 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net