“விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளையே பாதிக்கும்” – டிடிவி.தினகரன்

Homeசெய்திகள்

“விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளையே பாதிக்கும்” – டிடிவி.தினகரன்

“விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளை பாதிக்கும். அது என்டிஏ கூட்டணிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அதனால் தான் அவர் வந்ததில் இருந்து நான் வரவ

யப்பானில் முதல் போக்கிமொன் தீம் பூங்கா திறந்து வைப்பு
ஓமானில் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவும் ஈரானும் நடத்தின!!
வடக்கிலோ தெற்கிலோ இனவாதத்துக்கு இடமில்லை : ஜனாதிபதி தெரிவிப்பு


“விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளை பாதிக்கும். அது என்டிஏ கூட்டணிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அதனால் தான் அவர் வந்ததில் இருந்து நான் வரவேற்றுக் கொண்டிருக்கிறேன்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக, பாஜக கூட்டணிக்குள் இன்னும் பல்வேறு கட்சிகள் வரவேண்டி உள்ளது. கூட்டணி உறுதி செய்யப்பட்ட பிறகு சுமுகமாக தொகுதிப் பங்கீடு நடைபெற்று, வரும் 2026 தேர்தலை ஒற்றுமையாக சந்தித்து தமிழகத்தில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஜெயலலிதா ஆட்சி அமையும். வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் உறுதியாக வெற்றி பெறுவோம்.
திமுகவில் உள்ள குழப்பத்தால், அங்குள்ள கூட்டணி கட்சிகள் தொடர்ந்து நீடிக்குமா என திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கின்றது. தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது, போதையில் பள்ளி மாணவர்கள், பள்ளியிலேயே கஞ்சா உபயோகப்படுத்துகின்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சியில் கெட்டு போய் விட்டது.
தமிழகம் போதைப் பொருள் பன்னாட்டு சந்தையாக மாறிவிட்டது. போலீஸாரே கஞ்சா விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது. திமுக அரசு, விவசாயிகளை, அரசு ஊழியர்களை ஏமாற்றுவது போல், மக்களையும் ஏமாற்றுகிறார்கள். கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறார்கள்.

ஒரு குடும்பம் ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கிறது. தமிழகத்தில் குழந்தைகள் முதல் முதியவர்களை வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை தான் நடக்கிறது. உறவினர்கள்,நண்பர்கள், அரசியலில் இருப்பவர்களுக்கு அழைப்பு கொடுப்பது நட்பு ரீதியாக, உறவு ரீதியாகத் தான். அவர்கள் வரவில்லை என்றால் நம் பொறுப்பு இல்லை. அவர்கள் தனித்து விடப்படப் போகிறார்கள்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டதால், திமுகவிற்கு வெற்றிக்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த முறை வாய்ப்பில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களை விலைகொடுத்து வாங்கி விடலாம் என ஊழல் பணத்தை தின்று கொழுத்தவர்கள், வரிப்பணத்தை ருசித்தவர்கள் ரூ. 3 ஆயிரம் கொடுத்து வாங்கி விடலாம் என கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.
இன்னும் சில கட்சிகள், வேட்பாளர்களை தேடி அலைகின்றனர். மற்ற கட்சி வேட்பாளர்களை ரூ.10 கோடி தருகிறோம் என ஏமாற்றுகிறார்கள். கட்சி என்று வரும் போது உறவுக்கு வேலை இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி உள்ள அனைவரும் சரியாக உள்ளார்கள். அதனால் இந்தக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.
பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்புகளை 5 ஆண்டுகளில் உறுதியாக நிறைவேற்றுவார். ஆனால் திமுகவின் வாக்குறுதி டுபாக்கூர் வாக்குறுதிகள். 2006-ல் விஜயகாந்த் வந்த போது எப்படி பாதிப்பு இருந்ததோ, அதே போன்ற பாதிப்பு பல கட்சிகளுக்கு இருக்கும். ஆனால் விஜய் வந்திருப்பதின் மூலம் அதை விட அதிகமான பாதிப்பு இருப்பதற்கான சூழ்நிலை தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளை பாதிக்கும். அது என்டிஏ கூட்டணிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். எங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. எங்கள் வெற்றிக்கு உறுதியாக உதவி செய்யும். அதனால் தான் அவர் வந்ததில் இருந்து நான் வரவேற்றுக் கொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

COMMENTS