வாய்வெடிகுண்டு உட்கொண்ட யானை உயிரிழப்பு

Homeசெய்திகள்Design

வாய்வெடிகுண்டு உட்கொண்ட யானை உயிரிழப்பு

திருகோணமலை, மொரவெவ- அவ்வைநகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு (வாய்வெடி) உட்கொண்ட நிலையில் யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் (07) உயிரிழந்த நிலையில் யானை ஒன்று இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் குறித்து கிரித்தல வனவிலங்கு திணைக்கள வைத்தியர் கலிங்க ஆராய்ச்சி விசாரணையை முன்னெடுத்தார். இதன் போது வாயில் காயம் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டதோடு, வாய் வெடி உட்கொண்டமையினாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாகவும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மொரவெவ பிரதேசத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அதற்கமைய இதுவரை ஏழு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். மேலும் மொரவெவ பிரதேசத்தில் வனவிலங்குகள் அதிகளவில் கொல்லப்பட்டு வருவதாகவும் தேவையற்ற வெடி பொருட்களை பயன்படுத்தி மிருகங்களை கொல்ல வேண்டாம் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த யானை மரணித்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்க..

தித்வா புயல் பாதிப்புகளைச் சீரமைக்க ஒருங்கிணைந்த திட்டமிடல் அவசியம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தல் !
மாணவர்கள் , இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது !
உங்கள் மொழியில் பேசலாம் எனக்கூறும் அரசாங்கமே அவ்வுரிமையை மறுக்கிறது – எம்.ஏ.சுமந்திரன்
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்
பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது – வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் !

திருகோணமலை, மொரவெவ- அவ்வைநகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு (வாய்வெடி) உட்கொண்ட நிலையில் யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (07) உயிரிழந்த நிலையில் யானை ஒன்று இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் குறித்து கிரித்தல வனவிலங்கு திணைக்கள வைத்தியர் கலிங்க ஆராய்ச்சி விசாரணையை முன்னெடுத்தார்.
இதன் போது வாயில் காயம் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டதோடு, வாய் வெடி உட்கொண்டமையினாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாகவும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
மொரவெவ பிரதேசத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அதற்கமைய இதுவரை ஏழு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் மொரவெவ பிரதேசத்தில் வனவிலங்குகள் அதிகளவில் கொல்லப்பட்டு வருவதாகவும் தேவையற்ற வெடி பொருட்களை பயன்படுத்தி மிருகங்களை கொல்ல வேண்டாம் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த யானை மரணித்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திணைக்களத்தின் உயரதிகாரி யொருவர் குறிப்பிட்டார்