← முகப்பு தமிழ்

வல்வெட்டித்துறை, கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சா

🕐 1 நாள்கள் முன்னர் 📂 தமிழ் 16 பார்வைகள்

வல்வெட்டித்துறை, கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கெருடாவிலைப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 27-ஆம் திகதி பகல் வேளையில், வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளே நுழைந்தே இவர்கள் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தி, சி.சி.ரி.வி (CCTV) கெமராக்களை ஆய்வு செய்ததன் மூலம் சந்தேகநபர்களைக் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் வல்லைச் சந்தியிலும், மற்றையவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது, இவர்கள் வீட்டிற்குள் நுழைந்து பணத்தைப் பார்த்ததும், நெடுங்கேணியில் உள்ள ஒருவருக்கு 'வீடியோ கோல்' (Video call) மூலம் தகவல் தெரிவித்துள்ளமையும், அவர் அனைத்துப் பணத்தையும் எடுத்து வருமாறு பணித்தமையால் அதனை நெடுங்கேணிக்குக் கொண்டு சென்று காணி ஒன்றில் புதைத்து வைத்திருந்தமையும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 74 லட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் நீதிமன்ற அனுமதி பெற்று, தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய வல்வெட்டித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
3 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
4 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
8 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 21 நிமிடங்கள் முன்னர்
2
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 51 நிமிடங்கள் முன்னர்
3
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
5
Gajakesari Yoga in June 2026 bring luck and prosperity to these 4
இன்றைய ராசிபலன் · 2 மணி நேரம் முன்னர்
6
Suryakumar Yadav is all set to Removed As India T20 Captain; New
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
7
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்க
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net