← முகப்பு தலையங்கம்

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்

🕐 23 Feb 2026 📂 தலையங்கம் 72 பார்வைகள்
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பகுதி நாட்டை விட்டு நகர்ந்து வருவதால், இன்று (23) முதல் நிலவி வந்த மழைவீழ்ச்சி படிப்படியாக குறையும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுடன் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தைவான் ராணுவம் தற்போது
50 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக சதுரங்க அரங்கில் புதிய சரித்திரம்: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி 19 ஆண்டு கால சாதனையைச்
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net